"ஆல் ரவுண்டர்னா வாட்டசாட்டமா இருக்கணும்" - பாண்ட்யாவுக்கு சல்மான் பட் கொடுத்த அட்வைஸ்

"ஆல் ரவுண்டர்னா வாட்டசாட்டமா இருக்கணும்" - பாண்ட்யாவுக்கு சல்மான் பட் கொடுத்த அட்வைஸ்
"ஆல் ரவுண்டர்னா வாட்டசாட்டமா இருக்கணும்" - பாண்ட்யாவுக்கு சல்மான் பட் கொடுத்த அட்வைஸ்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மிகவும் ஒல்லியாக இருக்கிறார் அவர் வாட்டசாட்டமாக மாற வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள சல்மான் பட் "ஹர்திக் பாண்ட்யா மீது மிகவும் நம்பிக்கை வைத்திருக்கிறது இந்திய அணி. ஆனால் கடந்த பல மாதங்களாக அவர் விடுப்பில் இருப்பது போல எனக்கு தோன்றுகிறது. அவர் பேட்டிங் செய்யும்போது மிகவும் திறமையானவராக தெரிகிறார். காயமடைவதற்கு முன்பாக அவருடைய பவுலிங்கும் சிறப்பாக இருந்தது. ஆனால் பாண்ட்யாவின் பிரச்னை என்னவென்றால் அவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார். அவர் இன்னும் கொஞ்சம் எடையை கூட்ட வேண்டும். ஓல்லியாக இருப்பதால்தான் அடிக்கடி அவருக்கு காயம் ஏற்படுகிறது" என்றார்.

மேலும் பேசிய அவர் "அவர் அபார திறமைசாலி என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அற்புதமான பேட்டிங் திறமை, அழகான பவுலிங் ஆக்ஷன் என அனைத்துமே பிரமாதம். என்ன அவர் உடலால் அதிக அழுத்தத்தை தாங்க முடிவதில்லை. அதற்கு அவர் இன்னும் கொஞ்சம் உடலை எடையை கூட்ட வேண்டும். அதனை அவர் சரி செய்துகொள்வார் என நினைக்கிறேன். மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களான கபில் தேவ், இம்ரான் கான் ஆகியோரிடம் ஒப்பிட்டால் பாண்ட்யாவிடம் போதிய உடற்தகுதி இல்லை" என்றார் சல்மான் பட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com