ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்பிரிட் பும்ரா, முதன் முறையாக 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான தொடரில் 15 விக்கெட்களை வீழ்த்திய பும்ரா, தொடர் நாயகன் விருதை வென்றார். இதையடுத்து, அவர் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 27 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளார். முன்னதாக 24-வது இடத்தில் இருந்ததே பும்ராவின் உச்சமாக இருந்தது. அதேபோல், இந்திய அணியின் அக்ஷர் பட்டேல் 20-வது இடத்தில் இருந்து 10-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பேட்டிங்கில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தோனி(10), ரோகித் சர்மா(9) இருவரும் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்தனர். பேட்டிங் தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய அணியைச் சேர்ந்த 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அதிக தரப்புள்ளிகளை பெற்ற இந்திய வீரர்களில், சச்சின் படைத்திருந்த சாதனையை கோலி சமன் செய்திருந்தார். 1998 ஆம் ஆண்டில் டெண்டுல்கர் 887 புள்ளிகள் பெற்றிருந்தார். இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்கள் விளாசிய கோலியும் தற்போது 887 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.