உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் அமெரிக்க அணியின் தோல்விக்கு பொறுப்பேற்று அதன் பயிற்சியாளர் புரூஸ் அரினா பதவி விலகினார்.
66 வயதான புரூஸ் அரினா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியின் கீழ், விளையாடிய அமெரிக்க அணி, உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் சரிவை சந்தித்தது. கடைசி லீக் ஆட்டத்தில் டிரினிடாட் அண்ட் டொபாகோ அணியிடம் தோல்வி அடைந்து, உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை அமெரிக்க அணி இழந்தது.
இந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்று அமெரிக்க அணியின் பயிற்சியாளர் பதவியை புரூஸ் அரினா ராஜினாமா செய்தார். 1986-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அமெரிக்க அணி உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.