“ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி” - ஐபிஎல் தலைவர்

“ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி” - ஐபிஎல் தலைவர்
“ஐபிஎல் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி” - ஐபிஎல் தலைவர்
Published on

நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஐபிஎல் தலைவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பொதுமுடக்கத்தால் இந்தியாவில் ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகளை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. இதற்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் பிசிசிஐ விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை ஆகிய இரண்டு அமைச்சகங்களும் ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த அனுமதி அளித்துள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று விவோ நிறுவனத்திற்கு பதிலாக ஸ்பான்ஷர்ஷிப்பில் எந்த நிறுவனம் இடம்பெறும் என அறிவிக்கப்படவுள்ளதாகவும் பிரிஜேஷ் கூறியுள்ளார். இதற்காக அடுத்த 7 நாட்களில் விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதியன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐபிஎல் தொடர் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஷார்ஜா, அபுதாபி மற்றும் துபாய் ஆகிய 3 நகரங்களில் அனைத்து போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. இதற்காக அனைத்து நாடுகளில் இருந்தும் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குப் பின்னர் கிரிக்கெட் வீரர்கள் வருகை தரவுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு அதன்பின்னரே பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com