பிராவோ காயம், கஜ்ஜலின் பயிற்சி: சிஎஸ்கே-வில் அதிரடி மாற்றம்!

பிராவோ காயம், கஜ்ஜலின் பயிற்சி: சிஎஸ்கே-வில் அதிரடி மாற்றம்!
பிராவோ காயம், கஜ்ஜலின் பயிற்சி: சிஎஸ்கே-வில் அதிரடி மாற்றம்!
Published on

ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ காயம் அடைந்திருப்பதால், நாளை நடக்கும் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். அதோடு அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் எதிர்கொண்ட நான்கு போட்டிகளில், முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. மும்பையுடன் நடந்த நான்காவது போட்டியில் தோல்வியைச் சந்தித்தது. இந்த நான்கு போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரர்கள் அம்பத்தி ராயுடுவும் ஷேன் வாட்ச னும் சொல்லிக்கொள்ளும்படி ரன்கள் குவிக்க வில்லை. 

நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் ராயுடு,  எடுத்த ரன்கள், 28, 5, 1, 0. வாட்சன் 0,44, 13, 5. இந்த தொடரில் இவர்களின் ஃபார்ம் கேள்விக்குறியாக இருக்கிறது. தொடர்ந்து சொதப்பி வருவதால், அணியில் மாற்றம் இருக்கும் என்று ஏற்கனவே தோனி கூறியிருந்தார். இந்நிலையில், பஞ்சாப் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மோதுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் தொடக்க ஆட்டக்காரராக முரளி விஜய்-க்கு வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. அவருடன் டுபிளிசிஸ் களமிறக்கப்படலாம்.

(முரளி விஜய்)

கடந்த ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே முரளி விஜய்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த முறை அவர் ஃபார்மில் இருக்கிறார். முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார் என்பதால் அவருக்கு நாளை போட்டியில் வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிகிறது. அதோடு தமிழக அணியில் தமிழக வீரர்கள் யாருமே இல்லாததது முணு முணுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை போக்கும் விதத்திலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

(ஸ்காட் கஜ்ஜலின்)

சிஎஸ்கே அணியில் லுங்கி நிகிடி, டேவிட் வில்லே ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் விலகியுள்ள நிலையில் பிராவோவும் காயமடைந்துள் ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிகிடிக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் கஜ்ஜலின் சென்னை வந்துள்ளார். அவர் நேற்று அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் நாளை நடக்கும் போட்டியில் அவர் பங்கேற்பார் என்று தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com