நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வெயிட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், வெஸ்ட் இண்டீஸ்- இந்திய அணிகள் நேற்று முன் தினம் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. விராத் கோலி 72 ரன்களும் தோனி 56 ரன்களும் எடுத் தனர். பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 34.2 ஓவரில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, 42வது ஓவரை பிராத்வெயிட் வீசினார். அவர் வீசிய பந்து ஒன்று பேட்டிங் செய்து கொண்டிருந்த பாண்ட்யாவுக்கு பின்பக்கமாக சென்றது. நடுவர் இதற்கு வைட் கொடுத்தார். இதனால் ஆவேசமடைந்த பிராத்வெயிட், நடுவரிடம் வாக்குவாதம் செய்தார்.
போட்டி முடிந்த பின் தவறை பிராத்வெயிட் ஏற்றுக்கொண்டதால், அவருக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவிகிதம் அபாரதம் விதிக்கப்பட்டது.