மூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசித் தள்ளிய அக்தர்!

மூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசித் தள்ளிய அக்தர்!
மூளையே இல்லாத கேப்டன்சி: பாக். அணியை விளாசித் தள்ளிய அக்தர்!
Published on

மூளை இல்லாத கேப்டன்சியின் காரணமாகவே பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது என்று அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதிய போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த தோல்வி பற்றி கருத்துக் கூறியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ’ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ சோயிப் அக்தர் பாகிஸ்தான் அணியை சரமாரியாக விளாசித் தள்ளியுள்ளார். ஏற்கனவே, இந்த உலக கோப்பையில் பிட்னஸ் இல்லாத ஒரே கேப்டன் சர்ஃபிராஸ் அகமதுதான் என்று கூறியிருந்த சோயிப் அக்தர், இப்போது ஒரு படி மேலே சென்றிருக்கிறார்.


 
அவர் கூறும்போது, ‘’இந்த போட்டியில் டாஸ் வென்றது முக்கியமான விஷயம். அது  அதை வென்றதும் பந்துவீச்சை தேர்வு செய்தது, மூளையில்லாத கேப்டன்சியைதான் காட்டியது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 260-280 ரன்கள் எடுத்திருந்தாலும் சேஸிங் செய்யும் போது அது இந்தியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கும். பாகிஸ்தான் வெல்ல வாய்ப்பு கிடைத்திருக்கும். சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா செய்த அனைத்து தவறுகளையும் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் செய்துள்ளது. 

பந்துவீச்சும் சரியில்லை. ஹசன் அலி சரியாக வீசவில்லை. வாஹா எல்லையில் போய் சல்யூட் அடிக்கத் தெரிகிறது, (கடந்த 2018 ஆம் ஆண்டு வாஹா எல்லையில், இந்திய பாதுகாப்பு வீரர்களை அவமதிக்கும் வகையில் ஹசன் அலி நடந்துகொண்டார். இது சர்ச்சையானது) இங்கு திறமையை காண்பிக்க வேண்டியதுதானே? முகமது ஆமீர் முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுக்கத்தவறிவிட்டார். மூத்த வீரர்கள் இந்தப் போட்டியில் சரியாக விளையாடவில்லை’’ என்று அனைத்து வீரர்களையும் விமர்சித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com