ஐபிஎல் தொடருக்காக தரம்சாலா டெஸ்டைப் புறக்கணித்தாரா கோலி?: ஆஸி. முன்னாள் வீரர் கேள்வி

ஐபிஎல் தொடருக்காக தரம்சாலா டெஸ்டைப் புறக்கணித்தாரா கோலி?: ஆஸி. முன்னாள் வீரர் கேள்வி
ஐபிஎல் தொடருக்காக தரம்சாலா டெஸ்டைப் புறக்கணித்தாரா கோலி?: ஆஸி. முன்னாள் வீரர் கேள்வி
Published on

ஐபிஎல் போட்டிக்காக தரம்சாலா டெஸ்டில் விளையாடுவதை விராத் கோலி புறக்கணித்தாரா என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், குஜராத் லயன்ஸ் அணியின் பயிற்சியாளருமான பிராட் ஹாட்ஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்தது. டிராவில் முடிந்த அந்த டெஸ்ட் போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால், நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் வெற்றியாளரை முடிவு செய்யும் முக்கியமான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை விராத் கோலி தவிர்த்தார். ஐபிஎல் போட்டிக்கு முழு உடற்தகுதியை எட்டுவதற்காகவே விராத் கோலி தரம்சாலா டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பேசிய குஜராத் லயன்ஸ் அணியின் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரருமான பிராட் ஹாட்ஜ், தொடரை வெல்லும் முக்கியமான போட்டியில் கேப்டனாக ஒரு அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது முக்கியமான கடமை. ஆனால், ஐபிஎல் தொடர் தொடங்க பத்து நாட்களே இருக்கும் நிலையில், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதைத் தவிர்த்தால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பினை அதிகப்படுத்திக் கொள்ளலாம் என்று பிராட் ஹாட்ஜ் தெரிவித்தார். உலகின் பணக்கார கிரிக்கெட் லீக் தொடராகக் கருதப்படும் ஐபிஎல் தொடர், ஏப்ரல் 5ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியை, கோலி தலைமையிலா பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com