கிரிக்கெட்டில் மாட்ச் பிக்சிங் விவகாரம் 1999 ஆம் ஆண்டு தலை தூக்கியது. அப்போது தென் ஆப்பிரிக்காவின் ஈடு இணையற்ற கேப்டனா இருந்த ஹான்சி குரோனியே மாட்ச் பிக்சிங் விவகாரத்தில் மாட்டினார். அப்போது இந்திய வீரர்கள் அஸாருதின், ஜடேஜா உள்ளிட்ட பலரும் இவ்விவகாரத்தில் மாட்டினர். பின்பு, ஹான்ஸி குரோனியே குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார் ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு விமான விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Read Also -> உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
இந்த விவகாரத்துக்கு பின்பு ஐசிசி பல கடுமையான விதிமுறைகளை கிரிக்கெட் வீரர்களுக்கு விதித்தது. ஆனாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் முகமது ஆமிர், சல்மான் பட், முகமது ஆசிஃப், கம்ரான் அக்மல் ஆகியோரும் சூதாட்ட குற்றச்சாட்டுக்கு ஆளாகி சர்வதேசப் போட்டிகளில் விளையாட தடை பெற்றனர். இதில் முகமது ஆமிர் மட்டும் ஐசிசியிடம் தொடர்ந்து போராடி வழக்கில் வெற்றிப் பெற்று மீண்டும் பாகிஸ்தான் அணியில் விளையாட தொடங்கியுள்ளார்.
மாட்ச் பிக்ஸிங் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் என்பது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மீது தொடர்ந்து குறி வைக்கப்படுகின்றது. சில வீரர்களின் பேராசை காரணமாக மாட்ச் பிக்ஸிங்கில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற விஷயங்களை தடுப்பதற்காக ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டு, ஐசிசி நடத்தும் போட்டிகள் மற்றும் சர்வதேச நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் மீது தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
Read Also -> ’நான் வேணா ஓய்வு பெறட்டுமா?’ மேத்யூஸ் விரக்தி!
இப்போது ஆசியக் கோப்பை போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் துபாயில் ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவின் பொது மேலாளர் அலெக்ஸ் மார்ஷல் திடுக்கிடும் தகவல் ஒன்றை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதாவது கடந்த ஓராண்டில் மட்டும் மாட்ச் பிக்சிங் செய்யும் புக்கிகள் 5 அணிகளின் கேப்டன்களை அனுகியுள்ளதாக கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியது "ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஷசாத்தை இப்போது நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை தொடரில் புக்கிகள் அணுகியுள்ளனர். அவரை ஆப்கானிஸ்தான் ப்ரீமியல் லீக் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த கூறியுள்ளனர். இது தொடர்பான புகாரை ஷசாத் எங்களிடம் தெரிவித்துள்ளார்". இது தொடர்பாக மேலும் தெரிவித்த அலெக்ஸ் மார்ஷல் "கடந்தா ஓராண்டில் மட்டும் 5 சர்வதேச கிரிக்கெட் அணியின் கேப்டன்களை புக்கிகள் அணுகியுள்ளனர். ஆனால், அந்த கேப்டன்களின் பெயர்களை இப்போதைக்கு நாங்கள் வெளியிட மாட்டோம்.ஒரு நாள் போட்டிகளை விட டி20 போட்டிகளின் போதுதான் ஸ்பாட் பிக்சிங், மாட்ச் பிக்சிங் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. டி20 போட்டிகளுக்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாததால், புக்கிகள் வீரர்களை அணுகுகின்றனர். இதனை தடுப்பது ஐசிசிக்கு சவாலாகவே இருக்கிறது" என்றும் கூறியுள்ளார்.