இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசி. வீரர் வாட்லிங் அபார சதம்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசி. வீரர் வாட்லிங் அபார சதம்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: நியூசி. வீரர் வாட்லிங் அபார சதம்!
Published on

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து வீரர் வாட்லிங் அபார சதமடித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இப்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி மவுன்ட் மவுங்கானுயி-யில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி, 353 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 91 ரன்கள் எடுத்தார். 


நியூசிலாந்து தரப்பில் டிம் சவுதி (Tim Southee) 4 விக்கெட்டுகளும் நீல் வாக்னர் 3 விக்கெட்டுகளும் கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியது. நிதானமான ஆட்டத்தைத் தொடங்கிய அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவிலேயே விக்கெட்டை பறிகொடுத்தனர். கேப்டன் வில்லியம்சன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராஸ் டெய்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த வால்டிங்கும் கிராண்ட் ஹோமும் நிதானமாக ஆடினர். கிராண்ட்ஹோம் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து சட்னர் வந்தார். 

மறுமுனையில் சிறப்பாக ஆடிய வாட்லிங் சதம் அடித்தார். 149 பந்துகளில் அரை சதம் எடுத்த அவர், 251 பந்துகளில் இந்த சதத்தை எடுத்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 394 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை விட 41 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. வாட்லிங் 119 ரன்களுடனும் சட்னர் 31 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com