பிஸ்கட் சாப்பிட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு திடீர் தடை!

பிஸ்கட் சாப்பிட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு திடீர் தடை!
பிஸ்கட் சாப்பிட இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு திடீர் தடை!
Published on

இலங்கை கிரிக்கெட் வீரர்கள், டிரெஸ்சிங் ரூமில் பிஸ்கட் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை அணி வீரர்களிடையே பிட்னஸ் விவகாரம் பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதனால் பிஸ்கட் சாப்பிட அந்த அணி வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற பிறகு, அணியின் மானேஜர் அசன்கா குருசின்காவால் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதுபற்றி விளக்கம் அளித்துள்ள அசன்கா, ‘இந்த தடையை விதித்தது நான் இல்லை. அணியின் உடற்பயிற்சியாளர் இந்த முடிவை எடுத்துள்ளார். டிரெஸ்சிங் ரூமில் பிஸ்கட் வைக்கப்பட்டிருந்தபோது, அதை வெளியே எடுத்துச் செல்லுமாறு நான் சொன்னேன். அதை வைத்து இந்த தடையை நான் விதித்ததாகக் கூறியிருக்கலாம்’ என்றார். இதன் காரணமாக மானேஜருக்கும் வீரர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டதாக வந்த தகவலை, அசன்கா மறுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com