நாக்அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி

நாக்அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி
நாக்அவுட் சுற்றில் பெல்ஜியம் அணி
Published on

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 

ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் அணி துனிசியா அணிக்கு எதிரான போட்டியில் ஐந்து கோல்கள் அடித்து வெற்றி கண்டது. ஆட்டத்தின் 6 ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்பை பயன்படுத்தி நட்சத்திர வீரர் ஈடன் ஹாசர்ட் முதல் கோல் அடித்தார். 16 ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்காக இரண்டாவது கோலை மற்றொரு நட்சத்திர வீரர் ரொமேலு லுகாகு அடித்தார். 18 ஆவது நிமிடத்தில் துனிசியா வீரர் டைலன் ப்ரோன் கோல் அடித்தார்.

ஆட்டத்தின் முதல் பாதியில் கூடுதல் நேரத்தில் லுகாகு மற்றொரு கோல் அடித்தார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 51 ஆவது நிமிடத்தில் ஈடன் ஹேசார்ட் மற்றொரு கோல் அடித்து அசத்தினர். 90 ஆவது நிமிடத்தில் பாட்சுயாயி பெல்ஜியம் அணிக்கான ஐந்தாவது கோலை அடித்தார். கூடுதல் நேரத்தில் துனிசிய வீரர் கசிரி ஆறுதல் கோல் அடிக்க விறுவிறுப்பு நிறைந்த போட்டியின் முடிவில் பெல்ஜியம் அணி ஐந்துக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் வென்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com