பெல்ஜியம் கோல் கீப்பர் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' !

பெல்ஜியம் கோல் கீப்பர் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' !
பெல்ஜியம் கோல் கீப்பர் கைகளுக்கு 'கோல்டன் கிளவ்' !
Published on

ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா கால்பந்தாட்டப் போட்டிகள் எனும் கொண்டாட்டம் ஒரு வழியாக முடிவடைந்தது. இந்த உலகக் கோப்பையை பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி கைபற்றியது. ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி 32 நாடுகள் பங்கேற்ற உலகக் கோப்பையில் பல்வேறு புதிய கால்பந்து கதாநாயகர்களை அறிமுகப்படுத்தியது. இந்த உலகக் கோப்பையில் சிறந்த விளங்கிய வீரர்களுக்கு விருதும் கொடுத்து கெளவரவப்படுத்துகிறது பிஃபா அமைப்பு. இம்முறை பெல்ஜியம் கோல் கீப்பர் திபவ்ட் கோர்டோய்ஸ்-க்கு "கோல்டன் கிளவ்" விருது வழங்கப்பட்டது.

இதில் மிக முக்கியமானது கோல் கீப்பர்களுக்கான விருது. கோல் கீப்பர்களை கெளவரவிக்கும் வகையில்தான் ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் இறுதியில் "கோல்டன் கிளவ்" விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு அணியின் வெற்றி தோல்வியை முடிவு செய்வதே அந்ததந்த அணியின் கோல் கீப்பர்கள்தான். எனவே, கோல்டன் கிளவ் விருது முதலாவது உலகக் கோப்பை தொடரில் இருந்தே கொடுக்கப்பட்டு வருகிறது.

சோவியத் யூனியனின் மறைந்த கோல் கீப்பர் லீவ் யசின் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக 1994 ஆம் ஆண்டு சிறந்த கோல் கீப்பர்களுக்கான யசின் விருது அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டு முதல் இவ்விருது கோல்டன் கிளவ் விருதாக பெயர் மாற்றப்பட்டது. மேலும் சிறந்த கோல் கீப்பர்கள் சிறந்த வீரர்களாகவும் தேர்வு செய்ய தகுதியுடையவர்கள் என்று பிஃபா குழு முடிவு செய்தது.

இவ்வாறு 2002 ஆம் ஆண்டு ஜேர்மனி அணியின் ஆலிவர் கான் சிறந்த கோல் கீப்பருக்கான "கோல்டன் கிளவ்" விருதினையும், சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருதையும் வாங்கினார். கடந்த 2014 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்தாட்ட சாம்பியனான ஜெர்மனி அணியின் கோல் கீப்பர் ஆக இருந்த மெனுவள் நியோர் கோல்டன் கிளவ் விருதினை வென்றார்.  

இந்தாண்டு குரோஷியாவின் சுபாஸிக் அல்லது இங்கிலாந்து அணியின் பிக்கார்டு கோல்டன் கிளவ் விருதினை வெல்லலாம் என்று எதிப்பார்த்து இருந்தனர். ஆனால், பெல்ஜியத்தின் திபவ்ட் கோர்டோய்ஸ், கோல்டன் கிளவ் விருது கொடுத்து கெளரவப்படுத்தியது பிஃபா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com