13-ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பில் இருந்து விவோ நிறுவனம் விலகியதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தும் முடிவுக்கு பிசிசிஐ வந்திருக்கிறது. இருப்பினும் இந்த ஐபிஎல் தொடரில் சீன ஸ்பான்ஸர் நிறுவனங்கள் நிராகரிக்கப்படும் என தகவல்கள் கசிந்தன. இதை மறுத்த பிசிசிஐ, ஸ்பான்ஸர்ஷிப்பில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் ஸ்பான்ஸரிலிருந்து விலகிக்கொள்வதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ கடந்த சில நாள்களுக்கு முன்பாக தெரிவித்ததாக கூறப்பட்டது. அதேசமயம் அடுத்த ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்களின் ஸ்பான்ஸர்ஷிப்பினை தொடர விரும்புவதாகவும் விவோ கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடர் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து பிசிசிஐ - விவோ நிறுவனமும் விலகிக்கொள்வதாக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.