‘விசா தடை; மைதானங்கள் குழப்பம்; ஆடியன்ஸ்க்கு நோ’- கொரோனாவால் சிக்கித் தவிக்கும் ஐபிஎல்

‘விசா தடை; மைதானங்கள் குழப்பம்; ஆடியன்ஸ்க்கு நோ’- கொரோனாவால் சிக்கித் தவிக்கும் ஐபிஎல்
‘விசா தடை; மைதானங்கள் குழப்பம்; ஆடியன்ஸ்க்கு நோ’-  கொரோனாவால் சிக்கித் தவிக்கும் ஐபிஎல்
Published on

உலகின் பிரபல விளையாட்டு தொடர்களான ஏ.டி.பி டென்னிஸ், என்.பி.ஏ கூடைப்பந்து, இத்தாலிய கால்பந்து தொடர் ஆகியவை கொரோனா அச்சத்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் நடை‌பெறும் முன்னணி கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் போட்டிகளும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று நோயால் விளையாட்டு‌ப் போட்டிகளை நடத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால், மார்ச் 29-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் விளையாடும் சென்னை அணி வீரர்கள், வழக்கத்திற்கு மாறாக சீசன் தொடங்க ஒரு மாதத்திற்கு முன்பாகவே தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

சேப்பாக்கம் மைதானத்தில் தோனி பயிற்சியில் ஈடுப‌டுவதைக் காண ரசிகர்கள் பெருமளவில்‌ குவிந்து வந்தனர். தற்போது ஐபிஎல் போட்டித்தொடர் தள்ளிப்போயுள்ளதால், இனி‌ வலைப்பயிற்சியும் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்‌ளது. ரசிகர்கள் மைதானத்‌திற்கு உள்ளே வரவும் அனுமதி கிடையாது என தமிழ்நாடு‌ கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. பயிற்சி நடைபெறாது என்பதுடன், ஐபிஎல் தொடரும் தள்ளிப்போனதால், தோனியின் ஆட்டத்தைக்காண பேரார்வம் கொண்டிருந்‌த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்களின் பங்களிப்பு கணிச‌மாக இருப்பதை அனைவரும் அறிவர். ஆனால், கொரோனா காரணமாக ஏப்ரல் 15-ஆம் தேதி வரை எந்தவொரு நாட்டவரும் இந்தியா வருவதற்கான விசா ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளிநாட்டு வீரர்கள் வர இயலாத ‌‌‌சூழல் உருவாகியிருக்கின்றது. விசா தடை நீங்கிய பிறகும் ‌அவர்கள் வந்து பங்கேற்பார்களா? என சந்தேகம் எழுந்துள்ளது.

இதுதவிர்த்து,‌ 8 மைதானங்களில் வழக்கமாக நடைபெறுவதுபோல் ஐ.பி.எல் போட்டியை நடத்தாமல், வீரர்களின் பயணத்தை குறைக்க அருகருகே உள்ள இரண்டு மைதானங்களை தேர்வு செய்து அதில் அனைத்து போட்டிகளையும் நடத்தலாமா? என்பது கு‌றித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூ‌றப்படுகிறது.

இதுபோன்று பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில் ஏப்ரல் 15-ம் தேதிக்கு பிறகு ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கினாலும், போட்டிகளைக் காண ரசிகர்கள் அனுமதிக்கப்படுவது சந்தேகம்தான் எனத் தெரிகிறது. மூடிய மைதானங்களிலேயே போட்டிகள் பெரும்பாலும் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் அட்டவணையும் வழக்கம்போல் அல்லாமல் மாற்றி அமைக்கப்படலாம் எனவும் பேசப்படு‌கிறது.

இதுபோன்ற சூழலில், ஐபிஎல் நிர்வாகக் குழு மும்பையில் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளது. ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் 8 அணிகளின் உரிமையாளர்கள் இதில் பங்கே‌ற்கின்றனர். 13-ஆவது ஐபிஎல் தொடர் குறித்து அவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com