தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் சதம் அடித்திருந்த விராட் கோலி, இந்தப் போட்டியிலும் சதம் அடித்தார். அத்துடன் 160 ரன்கள் அடித்து இறுதிவரையிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஓரேபோட்டியில் அவர் சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
கேப்டனாக அதிக சதம் அடித்த இந்திய வீரர், தென்னாப்பிரிக்க மண்ணில் அதிகபட்ச ரன்கள் குவித்த இந்திய வீரர், கேப்டவுன் மைதானத்தில்
தென்னாப்பிரிக்கவுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் உள்ளிட்ட சாதனைகளை கோலி நிகழ்த்தியுள்ளார். மேலும் இந்தப்போட்டியில் தனது 100வது சிக்ஸரை அவர் அடித்துள்ளார்.
இந்நிலையில் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிசிசிஐ, ‘ரன் இயந்திரம் கோலி தனது 34வது சதத்தை அடித்துள்ளார். கிரிக்கெட் மாஸ்டர் கோலிக்கு எழுந்து நின்று சல்யூட்’என்று கூறியுள்ளது. இந்த ட்வீட் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.