இந்திய மகளிர் அணியைக் கௌரவிக்கும் பிசிசிஐ

இந்திய மகளிர் அணியைக் கௌரவிக்கும் பிசிசிஐ
இந்திய மகளிர் அணியைக் கௌரவிக்கும் பிசிசிஐ
Published on

மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இந்திய அணிக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவினாலும், கடந்த 12 ஆண்டுகளில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதித்த இந்திய மகளிர் அணி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. 
இந்த வரலாற்று நிகழ்வை சாத்தியப்படுத்திய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணிக்கு சிறப்பான வரவேற்பு மற்றும் பாராட்டு விழாவை நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. இங்கிலாந்தில் இருந்து வரும் புதன்கிழமை தாயகம் திரும்பும் மகளிர் அணி வீராங்கனைகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 லட்சம் மற்றும் நிர்வாகிகளுக்கு ரூ.25 லட்சம் பரிசளிக்கப்பட இருக்கிறது. இந்திய வீராங்கனைகள் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கும் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பாராட்டு விழாவுக்கான தேதி மற்றும் இடம் ஆகியவை விரைவில் முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com