டி.என்.பி.எல். போட்டிகளில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ ? - பிசிசிஐ விசாரணை..!

டி.என்.பி.எல். போட்டிகளில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ ? - பிசிசிஐ விசாரணை..!
டி.என்.பி.எல். போட்டிகளில் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ ? - பிசிசிஐ விசாரணை..!
Published on

தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகளில் சூதாட்டங்கள் நடைபெற்றிருப்பதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து பிசிசிஐ விசாரணையை தொடங்கியிருக்கிறது.

8 அணிகள் போட்டியிட்ட டி.என்.பி.எல் டி20 தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்தது. இதில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சாம்பியன் ‌பட்டம் வென்றது. தமிழக கிரிக்கெட் ரசிகர்களை விறுவிறுப்புடன் கொண்டு சென்ற இந்தத் தொடரில் தமிழக வீரர்களும், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுமான ரவிச்சந்திரன் அஸ்வின், முரளி விஜய், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், டி.என்.பி.எல் போட்டிகளில் சூதாட்டம் மற்றும் ‘மேட்ச் ஃபிக்ஸிங்’ நடைபெற்றிருப்பதாக பிசிசிஐ-க்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரை வீரர்கள் சில பிசிசிஐ-க்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்திய வீரரும், ஐபிஎல் குழுவை சேர்ந்தவரும் மற்றும் ராஞ்சி தொடரின் பயிற்சியாளர்களில் ஒருவருமான ஒரு முக்கிய நபருக்கு இதில் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை தொடங்கியிருக்கிறது.

ஆனால், இதில் அணியின் வீரர்களுக்கு மட்டுமே தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அணியின் உரிமையாளர்களிடம் இதுவரை எந்த விசாரணையும் தொடங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com