பாகிஸ்தானால் ஐபிஎல் போட்டிகளுக்கு சிக்கல்? என்ன செய்யப்போகிறது பிசிசிஐ ?

பாகிஸ்தானால் ஐபிஎல் போட்டிகளுக்கு சிக்கல்? என்ன செய்யப்போகிறது பிசிசிஐ ?
பாகிஸ்தானால் ஐபிஎல் போட்டிகளுக்கு சிக்கல்? என்ன செய்யப்போகிறது பிசிசிஐ ?
Published on

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை அடுத்தாண்டு நடத்துங்கள். அப்போதுதான் குழப்பமில்லாமல் ஐபிஎல் தொடரை இந்தாண்டு நடத்த முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.

இதனையடுத்து அண்மையில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் "செப்டம்பர் - அக்டோபர் மாதம் ஐபிஎல் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். ஆனால் அது ஐசிசியின் முடிவில்தான் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் உலகக் கோப்பை டி20 தொடரை ஐசிசி நடத்தவில்லை என்றால், அந்தத் தேதிகளை ஐபிஎல் போட்டிகளுக்காகப் பயன்படுத்திக்கொள்வோம். எனவே ஐசிசியின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அதன்பின்புதான் அடுத்த கட்டம் குறித்து யோசிக்க முடியும்" என்றார் அவர்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ வாசிம் கான் கூறும்போது " ஆசியக் கோப்பையை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டு வருகிறோம். ஆசியக் கோப்பையை செப்டம்பர் - அக்டோபரில் நடத்தலாம் என முடிவு செய்துள்ளோம். மேலும் பிஎஸ்எல் தொடரின் எஞ்சியப் போட்டிகளை நவம்பரில் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். எப்படி பார்த்தாலும் பிசிசிஐக்கு ஐபிஎல் தொடரை நடத்துவதில் சிக்கல் ஏற்படும்" என தெரிவித்தார்.

இது குறித்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா" நாளிதழுக்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் திட்டத்தை வைத்துப் பார்த்தால், இந்தாண்டு ஆசியக் கோப்பை நடத்துவதிலும் சிக்கல் இருக்கிறது. அந்தக் காலக் கட்டம் இந்தியாவுக்கு உகந்ததாக இருக்காது. வேண்டுமானால் பிஎஸ்எல் தொடரை அடுத்தாண்டு அவர்கள் ஒத்திவைக்கலாம். இப்போதுள்ள சூழ்நிலையை பார்த்தால் ஆசியக் கோப்பை போட்டிக்கு வாய்ப்பே இல்லை" என்றே தெரிகிறது.

இந்நிலையில் இதுகுறித்து மீண்டும் விளக்கமளித்துள்ள வாசிம் கான் "ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் - அக்டோபரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பது குறித்து எங்களுக்கு தெரியாது. ஐபிஎல் தொடர் குறித்து முறைப்படி அறிவிப்பு வந்தால் தேதிகள் கலந்தாலோசிக்கப்படும். ஆனால் இப்போதும் ஆசியக் கோப்பையை நடத்துவதற்கு சாத்தியம் இருக்கிறது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com