உலகளவில் பெண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்திலுள்ள வீராங்கனை அஷ்லிக் பார்ட்டி, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆஸி. ஓபன் டென்னிஸில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் கலந்துக்கொண்ட அஷ்லிக் பார்ட்டி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றதன்மூலம் கடந்த 42 வருடங்களில் இறுதிப்போட்டியில் பங்கேற்ற முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். 25 வயதாகும் அஷ்லிக் பார்ட்டி, இன்றைய தினம் நடந்த அரையிறுதி போட்டியில் சக போட்டியாளரான மேடிசனை 6-1, 6-3 என்ற கணக்கில் 1.02 மணி நேரத்தில் முறியடித்து, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார்.
முன்னதாக இவர் க்ராண்ட் ஸ்லாம் பட்டங்கள், ஃப்ரென்ச் ஓபன் 2019, விம்பில்டன் 2021 ஆகியவற்றை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆஸி. ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அஷ்லிக் பார்ட்டி, டேனியல் கோலின்ஸை எதிர்கொள்ள இருக்கிறார்.