பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்றது.
உலகக் கோப்பை தொடரின் 9வது லீக் போட்டி பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து இடையே நடைபெறுகிறது. லண்டனில் உள்ள கென்னிங்க்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்று, முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதனால் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
முன்னதாக நியூஸிலாந்து அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியில் பங்களாதேஷை எளிதில் வெல்ல வேண்டும் என திட்டமிட்டுள்ளது. அதேசமயம் பங்களாதேஷ் அணியும் தென்னாப்பிரிக்க அணியையே வென்று பலத்துடன் உள்ளது. அதுமட்டுமின்றி முதல் முறையாக பங்களாதேஷ் அணி 330 ரன்களையும் அடித்தது. இதனால் இன்றைய போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு கடும் சவாலாக இருக்க வேண்டும் என பங்களாதேஷ் முனைப்பில் உள்ளது.