நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பங்களாதேஷ் 244 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
உலகக் கோப்பை தொடரின் 9வது லீக் போட்டி பங்களாதேஷ் மற்றும் நியூஸிலாந்து இடையே நடைபெறுகிறது. லண்டனில் உள்ள கென்னிங்க்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்று, முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர் செளமியா சர்கார் 25 (25) ரன்களிலும், தமிம் இக்பால் 24 (38) ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அடுத்த வந்த ஆல்ரவுண்டர் ஷாகிப் உல் ஹசன் நிலைத்து விளையாடி 64 (68) ரன்கள் குவித்தார். பின்னர் வந்த வீரர்களும் அனைவரும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் 49.2 ஓவர்களில் பங்களாதேஷ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணியில் மேட் ஹென்றி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.