இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கிளீன் பௌல்டான பங்களாதேஷ் வீரர் சௌமியா சர்க்கார், நடுவர் அவுட் கொடுத்ததை எதிர்த்து டி.ஆர்.எஸ் முறையை பயன்படுத்தி அப்பீல் செய்து அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினார்.
நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து டி.ஆர்.எஸ் முறையில் அப்பீல் செய்யலாம். இந்த முறை பொதுவாக எல்பிடபிள்யூ, கேட்ச் அவுட் ஆகிய நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்ய பேட்ஸ்மேனால் பயன்படுத்தப்படும். ஆனால் தெளிவாக அவுட் என்று தெரியும், கிளீன் பௌல்டான பின் எந்த பேட்ஸ்மேனும் அப்பீல் செய்ததில்லை.
ஒரு அணி இரண்டு முறை தவறாக இந்த டி.ஆர்.எஸ். முறையை பயன்படுத்தினால், அதை மீண்டும் பயன்படுத்த முடியாது என்பதால் பேட்ஸ்மேன்கள் இதை முறையை மிகக் கவனமாக உபயோகிப்பர்.
ஆனால் பங்களாதேஷ் வீரர் சௌமியா சர்க்கார், கிளீன் பௌல்ட் ஆன பின், இந்த முறையை அந்த நொடியின் அவேசத்தில் பயன்படுத்தி அதிர்ச்சியை எற்படுத்தினார்.
இதற்கு முன், இதே டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் சிக்ஸர் அடித்ததை அவுட் என நினைத்து மற்றோரு பங்களாதேஷ் வீரரான சுபாஹிஸ் ராய் கொண்டாடியது சிரிப்பலைகளை எற்படுத்தியது.