மீண்டும் ஒரு ’பார்’ மோதல்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு எச்சரிக்கை!

மீண்டும் ஒரு ’பார்’ மோதல்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு எச்சரிக்கை!
மீண்டும் ஒரு ’பார்’ மோதல்: இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு எச்சரிக்கை!
Published on

மதுக் கூடத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரை, இங்கிலாந்து வீரர் தலையால் முட்டிய விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில், கிரிக்கெட் வீரர்கள் மதுபான விடுதிக்கு சென்றுள்ளனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பான்கிராஃப்டை, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர், ஜானி பேர்ஸ்டோவ் தலையால் முட்டினாராம். இது பெரும் பிரச்னையாக உருவெடுத்தது. 

இதுபற்றி பான்கிராஃப்டிடம் கேட்டபோது, ’மதுபானக் கூடத்தில் ஜானியுடன் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு கை கொடுப்பார் என்று எதிர்பார்த்தேன். அவர் தலையால் முட்டி எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இது வித்தியாசமாக இருந்தது. பிறகும் நாங்கள் நன்றாக பேசிக்கொண்டு இருந்தோம். வேறொன்றுமில்லை’ என்றார்.

பேர்ஸ்டோவ் கூறும்போது, ‘மதுக் கூடத்தில் பான்கிராஃப்டும் நானும் மகிழ்ச்சியாக அந்த பொழுதைக் கழித்தோம். எங்களுக்குள் எந்த பகை உணர்ச்சியும் இல்லை. இதை மறுநாள் நடந்த போட்டியிலேயே பார்த்திருக்க முடியும். இதை மீடியா பெரிதுபடுத்திவிட்டது’ என்றார்.
coach 
இதுபற்றி இங்கிலாந்து பயிற்சியாளர் டிரேவோர் பேலிஸ், களத்துக்கு வெளியே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் இங்கிலாந்து வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கோபமாக எச்சரிக்கை செய்துள்ளார்.

ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், மதுக்கூடத்தில் ஒருவரை தாக்கிய விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு ’பார்’ சண்டை இங்கிலாந்து அணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com