ஆஸ்திரேலியர்களை இனி ஆடுகளத்திற்கு வெளியிலும் நண்பர்களாக கருத முடியாது என இந்திய கிரிகெட் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார்.
இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பாடர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் போது பல சர்ச்சைகள் உருவாகின. இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான கிரிகெட் உறவை மிகவும் பாதித்துள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த தொடர் தொடங்குவதற்கு முன் செய்தியாள்களிடம் பேசிய விராட் கோலி, ஆஸ்திரேலிய வீரர்களுடன் கிரிகெட் மைதானத்தில் சண்டையிட்டாலும் ஆடுகளத்திற்கு வெளியில் அவர்கள் நண்பர்கள்தான் என கூறியிருந்தார்.
ஆனால் சர்ச்சைகள் நிறைந்த தொடரை வென்ற பிறகு செய்தியாள்களிடம் பேசிய கோலி, தான் ஆடுகளத்திற்கு வெளியில் ஆஸ்திரேலிய வீரர்கள் நண்பர்கள்தான் என்று கூறியது தற்போது மாறிவிட்டதாக தெரிவித்தார். இனி அவர்களை எங்கும் நண்பர்களாக கருத முடியாது என்று ஆஸ்திரேலியர்கள் தனக்கு உணர்த்திவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் விராத் கோலியின் காயத்தை கேலி செய்தார். மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டுமன்றி ஆஸ்திரேலிய ஊடகங்களும் கோலியை விலங்குகளுடனும் டொனால்ட் ட்ரம்புடனும் ஒப்பிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.