ஊதியப் பிரச்னைக்கு தீர்வு காணப்படாவிடில், தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தை புறக்கணிக்கப் போவதாக ஆஸ்திரேலிய A கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சிட்னியில் இன்று நடைபெற்ற வீரர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டத்தில், ஊதிய விவகாரத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே வரும் 12ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் செல்வது என முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க தலைமை நிர்வாகி அலிஸ்டைர் நிக்கோல்சன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய ஏ அணியின் வீரர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக கேப்டன் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.