காபா மைதானத்தில் ஆஸி அணியின் 32 ஆண்டுகால வரலாறு: முறியடிக்குமா இந்தியா?

காபா மைதானத்தில் ஆஸி அணியின் 32 ஆண்டுகால வரலாறு: முறியடிக்குமா இந்தியா?
காபா மைதானத்தில் ஆஸி அணியின்  32 ஆண்டுகால வரலாறு: முறியடிக்குமா இந்தியா?
Published on

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி உணவுநேர இடைவெளி வரை 27 ஓவர்களில் 65 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஸ்மித்தும், லபுஷேனும் 48 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். முதல் செஷனை பொறுத்தவரையில் இரு அணிகளும் 50:50 என ஆதிக்கம் செலுத்தி உள்ளன. 

அதே நேரத்தில் கடந்த 1988 முதல் காபாவில் நடைபெற்ற 31 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது இல்லை. 24 போட்டிகளில் வெற்றி, 7 போட்டிகள் டிரா என முடிவுகள் வந்துள்ளன. சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திய முன்னணி அணிகள் கூட இந்த மைதானத்தில் 1988-க்கு பிறகு ஆஸ்திரேலியாவை வென்றதில்லை. அதை வைத்து பார்க்கும்போது இந்த மைதானம் ஆஸ்திரேலியாவின் கோட்டை. அந்த அணியின் வெற்றி நடையை ரஹானே தலைமையிலான இந்திய அணி நிச்சயம் தகர்க்கும் எனத் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். 

கடைசியாக 1988இல் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவை காபா மைதத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மைதானத்தில் சுழற்பந்து வீச்சாளர்களை காட்டிலும் வேகப்பந்து வீச்சாளர்களின் கையே ஓங்கி உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com