இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் ஆஷஸ் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரை 3 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. நான்காவது போட்டி டிராவில் முடிந்தது. தற்போது ஐந்தாவது போட்டி Bellerive ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்த போட்டியில் பவுலிங் தேர்வு செய்தது.
இந்த போட்டியின் 22-வது ஓவரை இங்கிலாந்து அணியின் சீனியர் பவுலர் ஸ்டூவர்ட் பிராட் வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் எதிர்கொண்டார். பந்து வீசுவதற்கு முன்னதாகவே லபுஷேன், அவுட்சைட் ஆப் திசையில் நகர்ந்து பந்தை தட்டிவிட முயன்றார். ஆனால் அவர் ஸ்லிப்பாகி விழுந்தார். அதை கவனித்த பிராட் பந்தை மிடில் ஸ்டம்ப் திசையில் வீச, அது ஸ்டம்புகளை தகர்த்தது. 44 ரன்களில் லபுஷேன் அவுட்டானார். அப்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்களை எடுத்திருந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விசித்திரமான முறையில் அவுட்டான டிஸ்மிஸல்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. ஸ்டூவர்ட் பிராட் செய்த தரமான சம்பவத்தால் அதை பார்த்த பார்வையாளர்கள் மிரண்டு போயுள்ளனர்.