வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி தடுமாற்றத்தில் உள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 10வது லீக் போட்டி இன்று ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. நாட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ச் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றது. அத்துடன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான களமிறங்கிய வார்னர் மற்றும் கேப்டன் ஃபின்ச் ஆரம்பத்திலேயே சொதப்பினர். தாமஸ் வீசிய பந்தை எதிர்கொண்ட ஃபின்ச் 6 ரன்களில் கீப்பர் ஹோப்பிடம் கேட்ச் ஆனார். அவரைத் தொடர்ந்து 3 ரன்களில் வார்னரும் அவுட் ஆகினார்.
இதையடுத்து வந்த உஸ்மான் கவாஜா சற்று நேரம் நிலைத்து அட, பின்னர் அவரும் 13 (19) ரன்களில் ரஸல் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதயடுத்து வந்த மேக்ஸ்வெல் ரன்கள் எதுவும் எடுக்காமல் 0 (2) ரன்னில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா 38 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.