சிட்னியில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தையடுத்து 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 3-வது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிய நிலையில், 4-வது டெஸ்ட் போட்டி, சிட்னியில் கடந்த புதன் அன்று தொடங்கியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து அணி 294 ரன்களை எடுத்தது. பின்னர் இரண்டாம் இன்னிங்சில் 122 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
5வது நாள் ஆட்டம் இன்று நடந்த நிலையில், 102 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 270 ரன்களை இங்கிலாந்து அணி எடுத்து இருந்த போது, ஆட்டம் முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால், இந்த போட்டி டிராவில் முடிந்தது. 4ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தையடுத்து 3-0 என்ற கணக்கில் ஆஷஸ் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா.