2023-ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை போட்டியை நடத்த ஆஸ்திரேலிய கால்பந்து சம்மேளனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
அதற்கான அனைத்து விதமான நிதியுதவிகளையும் செய்யத் தயராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் மால்கல்ம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சியில் மடில்டஸ் என்ற செல்லப்பெயரோடு அழைக்கப்படும் ஆஸ்திரேலிய கால்பந்து வீராங்கனைகளுடன் அவர் கலந்து கொண்டார். இவ்விழாவின் போது ஆஸ்திரேலிய விளையாட்டுத்துறை அமைச்சர் க்ரெக் ஹண்ட் வீராங்கனைளுடன் கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். 2023ம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்த கொலம்பியா, ஜப்பான், தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் நடத்த ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.