ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில், 34 வருடங்களில் இல்லாத அளவு ஆஸ்திரேலிய அணி கடும் பின்னடைவை சந்தித் துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவ்வப்போது கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். ஒவ்வொரு தொடர் முடிந்ததும் புள்ளிப்பட்டியல் வரிசையில் மாற்றம் ஏற்படும். அதன்படி, ஒரு நாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணி முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் இந்திய அணி இருக்கிறது. தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த வரி சையில் இருக்கிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி, தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்துக்கு அந்த அணி தள்ளப்பட்டது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முதல் ஐந்து இடங்களிலேயே சுற்றி சுற்றி வந்துகொண்டிருக்கும். கடைசியாக 1984ம் ஆண்டு ஜனவரி மாதம்தான் அந்த அணி ஆறாவது இடத்தில் இருந்தது. 34 வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் அந்த இடத்துக்குத் தள்ளப்பட்டி ருக்கிறது. இப்போது நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் வென்றால் கூட ஐந்தாவது இடத்துக்கு அந்த அணி முன்னேற வாய்ப்புள்ளது.