மகளிர் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா புதிய சாதனை படைத்தார்.
ஆஸ்திரேலியா - இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி (Alyssa Healy) 61 பந்துகளில் 148 ரன்கள் அடித்து சாதனை படைத்தார்.
மகளிர் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் ஒரு வீராங்கனையின் தனிநபர் அதிகபட்சம் இது. 29 வயதான அலிசா, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆடிய இலங்கை அணி 94 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.