இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டி20 தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்தது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை நழுவவிட்டது. இருப்பினும் நேற்று நடைபெற்ற 3வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணி சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கிறது. 275 ரேட்டிங்குடன் ஆஸ்திரேலிய முதலிடத்திலும், 271 ரேட்டிங்குடன் இங்கிலாந்து அணி 2ஆம் இடத்திலும் உள்ளது. அதைத்தொடர்ந்து 266 ரேட்டிங்குடன் இந்தியா 3ஆம் இடத்தில் உள்ளது.
அத்துடன் சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் முதலிடம் பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி 877 ரேட்டிங்குடன் அவர் முதலிடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து 2ஆம் இடத்தில் பாபர் அசாமும், 3ஆம் இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்-ம் உள்ளனர்.
முன்னதாக, இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நேற்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில், முதல் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் பேரிஸ்டோவ் 55 (44) ரன்கள் எடுத்தார். 2வது பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.