டெத் ஓவர்களில் ஆஸி.க்கு ஷாக் கொடுத்த இந்திய பவுலர்கள்! வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்!

டெத் ஓவர்களில் ஆஸி.க்கு ஷாக் கொடுத்த இந்திய பவுலர்கள்! வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்!
டெத் ஓவர்களில் ஆஸி.க்கு ஷாக் கொடுத்த இந்திய பவுலர்கள்! வெற்றிக்கு 5 முக்கிய காரணங்கள்!
Published on

டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியின் கைகளில் இருந்த வெற்றியை பறித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை ருசித்தது இந்திய அணி. இறுதிவரை ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி என்றிருந்த நிலையில் முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தன்வசப்படுத்தியது இந்திய அணி.

ஆஸ்திரேலியா அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே பயிற்சி ஆட்டம் இன்று காலையில் நடைபெற்றது. 6 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியை வென்று வெற்றியுடன் ஒரு பாசிடிவிட்டியோடு உலககோப்பையை தொடங்கியிருக்கிறது இந்திய அணி.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பிஞ்ச் இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு பணித்தார். பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 186 ரன்கள் குவித்தது. 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இந்திய பந்துவீச்சை பவுண்டரி சிக்சர்கள் என விரட்டி நல்ல அடித்தளத்தை அமைத்தது. கடைசிவரை நின்று சிறப்பாக விளையாடிய கேப்டன் பிஞ்சால் கடைசி நேரத்தில் அணிக்கு வெற்றியை பெற்று தர முடியவில்லை. கடைசி 3 ஓவர் வரை ஆஸ்திரேலியா அணிக்கே என்ற நிலையில் வெற்றியை பறித்து தன்வசம் வைத்துகொண்டது இந்திய அணி. இந்திய அணி வென்றதற்கும் ஆஸ்திரேலியா அணி தோற்பதற்கும் முக்கியமான காரணங்களை விரிவாக பார்ப்போம்.

விராட் கோலியின் பீல்டிங்:

வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது விராட் கோலியின் கிரவுண்ட் பீல்டிங் தான். கடைசி 2 ஓவர்களில் 16 ரன்களே தேவை என்ற இடத்தில் ஆஸ்திரேலியாவின் இளம் அதிரடி வீரர் டிம் டேவிட் களத்தில் இருந்தார். அப்போது ஹர்சல் பட்டேல் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் ஜோஸ் சிங்கிளிற்கு லெக் ஃபார்வர்டில் தட்டி விட்டு ஓடினார். அப்போது வேகமாக வந்த விராட் கோலி பந்தை எடுத்து த்ரோ அடித்தார், ஒரு ஸ்டம்ப் மட்டுமே தெரியும் பார்வை இடத்தில் இருந்து டைவ் அடித்து கிடைமட்டமாக அவர் அடித்த அந்த த்ரோ நேராக சென்று லெக் ஸ்டம்பை தெறிக்கவிட்டது. அந்த ரன் அவுட் மட்டும் இல்லை என்றால் அடுத்த 3 அல்லது 4 பந்துகளிலேயே மேட்சை முடித்து வைத்திருப்பார் டிம் டேவிட்.

@imVkohli #ViratKohli #INDvAUS pic.twitter.com/DTNKHzyTwF
— Naveen....DHFAA (@Naveen48336812) October 17, 2022

இறுதி ஓவரில் 3 பந்துகளுக்கு 7 ரன்கள் தேவை என்ற இடத்தில் ஷமி வீசிய பந்தை சிக்சருக்கு விளாசினார் கம்மின்ஸ். அப்போது லாங் ஆன் பீல்டிங்கில் இருந்த விராட் கோலி ஜம்ப் செய்து ஒரு கையால் கேட்ச் பிடித்து தூக்கி எறிந்தார் விக்கெட்டை. அணிக்கு தேவையான நேரத்தில் அவர் அளித்த பங்களிப்பு தான் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தது.

ஹர்சல் பட்டேல் வீசிய 19ஆவது ஓவர்:

ஹர்சல் பட்டேல் அதற்கு முன் வீசிய இரண்டு ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்திருந்தார். 2 ஓவர்களுக்கு 16 ரன்கள் தான் தேவை என்ற இடத்தில் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசி 76 ரன்களுடன் களத்தில் இருக்கும் நேரத்தில் பந்துவீச வந்தார் ஹர்சல். எளிதில் ஆஸ்திரேலியா வென்றுவிடும் என்ற இடத்தில் முதல் பந்திலேயே ஆரோன் பிஞ்சை பவுல்டாக்கி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்தார் ஹர்சல் பட்டேல். இரண்டாவது பந்தில் டிம் டேவிட் ரன் அவுட் ஆகி வெளியேற அடுத்த 4 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து இந்திய அணிக்கு வெற்றிக்கான ஒரு நல்ல வாய்ப்பை அமைத்து கொடுத்தார் ஹர்சல் பட்டேல். 19வது ஓவர் சரியாக அமைந்திருக்கா விட்டால் நிச்சயம் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டி இருக்காது. இன்னும் இரண்டு, மூன்று ரன்கள் கூடுதலாக கொடுத்திருந்தாலே போட்டி ஆஸ்திரேலியாவின் வசம் சென்றிருக்கக் கூடும்.

ஷமியின் அட்டாக் - 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள்:

இறுதி ஓவரில் 11 ரன்களை யார் டிஃப்ண்ட் செய்யப்போகிறார்கள் என்று யோசித்த போது எங்கிருந்தோ வந்தார் முகமது ஷமி. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவர் இந்திய அணியுடனே இணைந்தார். வலைபயிற்சியில் கூட அவர் பங்கேற்கவில்லை. இதற்கு முன்னர் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் ஒருவருடத்திற்கு முன்னர் விளையாடி இருந்தார்.

இந்நிலையில், இறுதி ஓவரில் 11 ரன்களை டிஃபண்ட் செய்ய வந்தார் முகமது ஷமி. முதல் இரண்டு பந்துகளில் தலா 2 ரன்கள் வீதம் 4 ரன்களை சேர்த்தது ஆஸ்திரேலியா அணி, அடுத்து ஷமி வீசிய 3ஆவது பந்தை சிக்சருக்கு அடித்தார் கம்மின்ஸ், லாங் ஆனில் இருந்த விராட் ஒரு கையில் அபார கேட்சை பிடித்து அவுட்டாக்கினார். பின்னர் அகரை ரன் அவுட் செய்த ஷமி, அடுத்தடுத்து வந்த இங்லிஸ் மற்றும் ரிச்சர்ட்ஷன் இருவரையும் பவுல்ட் எடுத்து மேட்ச்சை முடித்து வைத்தார் முகமது ஷமி.

ஷமி ஏன் ஒரு ஓவர் மட்டும் வீசினார் என்பது குறித்து போட்டி முடிந்த பிறகு பேசிய ரோகித் சர்மா, “அவர் (ஷமி) நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் விளையாட வருகிறார். எனவே அவருக்கு ஒரு ஓவர் கொடுக்க விரும்பினோம். குறிப்பாக அவருக்கு ஒரு சவாலை கொடுக்க விரும்பினேன். அதனால் தான் இறுதி ஓவரை வீச அவரை அழைத்தேன். அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள்" என்றார்.

கே.எல்.ராகுல் மற்றும் சூரியகுமார் அரைசதம்:

ஒரு அணி வெற்றி பெற டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் மற்றும் டெய்ல் எண்டர் பேட்ஸ்மேன்கள் என அனைவரிடத்தில் இருந்தும் பங்களிப்பு பெற்றால் தான் ஒரு அணி வெற்றிபெற முடியும். அந்த வகையில் இந்த போட்டியில் டாப் ஆர்டர் கேஎல் ராகுல் மற்றும் மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் இருவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அணி நல்ல ஸ்கோரை எட்ட காரணமாக அமைந்தனர்.

அஸ்வின் கடைசிபந்தில் அடித்த சிக்சர்:

இறுதி 2 பந்துகள் இருந்த நிலையில் இறங்கிய டெய்ல் எண்டர் ஆன அஸ்வின் கடைசி பந்தில் சிக்சர் அடித்து 186 ரன்களுக்கு உயர்த்தினார். அவர் அடித்த அந்த 6 ரன்கள் வித்தியாசத்தில் தான் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வகையில் டெய்ல் எண்டர்களும் அணிக்கு பங்களிப்பு அளிக்க வேண்டியது முக்கியமானதாக இருக்கிறது. இதனால் எப்போதும் ஆல் ரவுண்டர்கள் டி20 போட்டிகளில் முதல் தேர்வாக இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com