கடைசி ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ள முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனையடுத்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை 36 ரன்களில் வீழ்த்தியது இந்தியா.
இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி பெங்களூருவில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பவுலிங் செய்கிறது.
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச், மார்கஸ் லபுஷானே, ஸ்டீவன் ஸ்மித், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரே, ஆஷ்டன் அகர், பாட் கமின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசல்வுட் , ஆடம் ஜாம்பா.
இந்திய அணி: ரோஹித் ஷர்மா, தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி. ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ஜடேஜா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், முகமது ஷமி. ஜஸ்ப்ரீத் பும்ரா.