ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: நாக்அவுட் சுற்றில் போராடும் அணிகள்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: நாக்அவுட் சுற்றில் போராடும் அணிகள்
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: நாக்அவுட் சுற்றில் போராடும் அணிகள்
Published on

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில், இத்தாலியைச் சேர்ந்த ரோமா அணியுடனான ஆட்டத்திற்காக அத்லெடிக்கோ மேட்ரிட் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டி மேட்ரிட் நகரில் நடைபெறுகிறது. நாக்அவுட் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனில் இந்தப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்துடன் அத்லெடிக்கோ மேட்ரிட் அணி உள்ளது. சி பிரிவில் ரோமா அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்தின் செல்ஸி அணி 7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஸ்பெயினைச் சேர்ந்த அத்லெடிக்கோ மேட்ரிட் அணி 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

ஜெர்மனியை சேர்ந்த பேயர்ன் மியூனிக் அணியுடனான ஆட்டத்திற்காக பெல்ஜியத்தை சேர்ந்த ஆண்டர்லெக்ட் அணி தீவிரப் பயிற்சி மேற்கொண்டது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளில், பேயர்ன் மியூனிக் அணி ஏற்கனவே நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்லெக்ட் அணி நான்கு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com