18 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரங்களில் நடைபெற்றன. 45 நாடுகளைச் சேர்ந்த 312 வீரர்கள் 260 வீராங்கனைகள் என மொத்தம் 572 பேர், வில்வித்தை, தடகளம், குத்துச்சண்டை, துப்பாக்கிச்சுடுதல் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
கடந்த 18ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டி கண்கவர் நிகழ்ச்சியுடன் இன்று நிறைவடைந்தது. ஜகார்த்தாவில் நடைபெற்ற நிறைவு விழாவில் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல வண்ணங்களில் லேசர் ஒளிவெள்ளத்தில் மின்னிய கலைவிழா காண்போரை வெகுவாக கவர்ந்தது.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களை வென்றுள்ளது.