ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் 2021 இந்தியாவில் நடத்தப்படும் என சர்வதேச குத்துச் சண்டை கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் 2021 இந்தியாவால் நடத்தப்படும் என தெரிவித்து உள்ளது. இதன்படி வருகிற மே 21 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். நடப்பு 2021ம் ஆண்டு போட்டிகளில் 32 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்தப் போட்டி முதலில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக போட்டி 2021 ஆம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இது குறித்து ஆசிய குத்துச் சண்டை கூட்டமைப்பின் தலைவர் அனாஸ் அல் ஒட்டாய்பா பேசும்போது "2021-ஆம் ஆண்டில் ஆசியாவில் நடைபெறும் முதல் குத்துச் சண்டை போட்டியாக ஆசிய ஆடவர் மற்றும் மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் இருக்கும். ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஆசிய குத்துச் சண்டை வீரர்கள் தயாராவதற்கான சுயமதிப்பீடு மற்றும் சுயபரிசோதனை செய்து கொள்ள இது உதவும்" என்றார் அவர்.