ஆசியகோப்பை தொடருக்கான சூப்பர் 4 சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன. சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2022ஆம் ஆண்டுக்கான ஆசியகோப்பை தொடர் கடந்த மாதம் ஆகஸ்ட் 27ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங்க் அணிகள் என ஆசிய கண்டத்தின் 6 அணிகள் பங்குபெற்று விளையாடி வந்தன.
இந்நிலையில் 6 போட்டிகள் கொண்ட லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் முதலிய நான்கு அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. வங்கதேசம் மற்றும் ஹாங்காங் இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரை விட்டே வெளியேறியது.
இந்நிலையில் 6 போட்டிகள் கொண்ட சூப்பர் 4 சுற்றுபோட்டிகள் இன்று தொடங்குகிறது. 6 போட்டிகள் கொண்ட இந்த சுற்றில் 4 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியை எதிர்கொண்டு ஆடும். இன்று தொடங்கும் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஷார்ஜா மைதானத்தில் இரவு 7.30 மணியளவில் போட்டி தொடங்கி நடைபெறும்.
சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலும் வென்று இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.