ஹாட்ரிக் ‘கோல்டன் டக்’ - அகர்கர் சாதனையை நெருங்கும் டர்னர்

ஹாட்ரிக் ‘கோல்டன் டக்’ - அகர்கர் சாதனையை நெருங்கும் டர்னர்
ஹாட்ரிக் ‘கோல்டன் டக்’ - அகர்கர் சாதனையை நெருங்கும் டர்னர்
Published on

ஐபில் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் டர்னர் தொடர்ச்சியாக மூன்று முறை ‘கோல்டன் டக்’ ஆகியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு ரன் எடுத்தது. இதில் ரஹானே 63 பந்தில் 105 ரன்கள் குவித்து கடைவி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்தப் போட்டியில் டர்னர் தான் சந்தித்த முதல் பந்திலே டக் அவுட் ஆனார். இந்த ஐபிஎல் தொடரில் டர்னர் தொடர்ச்சியாக மூன்றாவது முறை கோல்டன் டக் ஆகியுள்ளார். அதாவது, மூன்று முறை தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகியுள்ளார். அதேபோல், தொடர்ச்சியாக 5 டி20 போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். இதில், நான்கில் கோல்டன் டக். இதற்கு முன்பாக பஞ்சாப் மற்றும் மும்பை அணிகளுக்கு எதிராக கோல்டன் டக் ஆகினார்.

ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டிகளில் திண்டா, ராகுல் சர்மா, கவுதம் காம்பீர், ஷர்குல் தாக்கூர், நெகி ஆகியோரும் தொடர்ச்சியாக மூன்று முறை டக் அவுட் ஆகியுள்ளனர். 

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் 1999ம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில் தொடர்ந்து 5 முறை டக் அவுட் ஆகியிருந்தார். அதில், நான்கில் ‘கோல்டன் டக்’. ஒட்டுமொத்தமாக அகர்கர் 7 முறை தொடர்ச்சியாக டக் அவுட் ஆகியுள்ளார். டர்னர் இன்னும் இரண்டு போட்டிகளில் தொடர்ந்து டக் அவுட் ஆகும் பட்சத்தில் அகர்கர் சாதனையை சமன் செய்வார்.

ஆனால், இதே டர்னர்தான் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிரடியாக விளையாடி 84 ரன்கள் குவித்தவர். அந்தப் போட்டியில் இந்தியாவிடம் இருந்து வெற்றியை பறித்தவர் டர்னர். ஆனால், தற்போது தொடர்ச்சியாக டக் அவுட் ஆகி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com