“விக்கெட் கீப்பராக அணியின் வெற்றிக்கு உதவுவேன்” - கே.எல்.ராகுல்

“விக்கெட் கீப்பராக அணியின் வெற்றிக்கு உதவுவேன்” - கே.எல்.ராகுல்
“விக்கெட் கீப்பராக அணியின் வெற்றிக்கு உதவுவேன்” - கே.எல்.ராகுல்
Published on

ஆஸ்திரேலிய தொடரில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் கே.எல்.ராகுல். அதோடு ஷார்ட்டர் பார்மெட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராகவும் அவர் செயல்பட உள்ளார். இந்நிலையில் ஒரு விக்கெட் கீப்பராக இந்திய அணியின் வெற்றிக்காக உதவுவேன் என அவர் தெரிவித்துள்ளார். 

“சாஹல், ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுடன் எனக்கு நல்ல புரிதல் உள்ளது. அதை பயன்படுத்தி ஆட்டத்தின் போது எந்த இடத்தில் பந்து வீசலாம், எந்த வேகத்தில் பந்து வீசலாம், லெந்த், லைன் என என்னால் யோசனை சொல்ல முடியும். சமயங்களில் களத்தில் பவுலர்கள் செய்கின்ற தப்பையும் சுட்டிக் காட்டலாம். அது தான் விக்கெட் கீப்பரின் கடமை. இதற்கு முன்னர் இந்த பணியை நியூசிலாந்து தொடரின் போது செய்திருந்தேன். அதை நான் ரொம்பவே அனுபவித்து விளையாடுகிறேன். கேப்டன் மற்றும் பவுலர்களுக்கு விக்கெட் கீப்பராக என்னால் முடிந்த யோசனைகளை சொல்லி அணியின் வெற்றிக்கு உதவுவேன்” என சொல்லியுள்ளார். 

 

அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வழிநடத்திய ராகுல் 14 ஆட்டங்களில் 670 ரன்களை விளாசி இருந்தார். நல்ல ஃபார்மில் உள்ள ராகுலை வீழ்த்துவதே ஆஸ்திரேலிய அணியின் வியூகங்களில் ஒன்றாக இருக்கும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com