பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற உலகக்கோப்பை தகுதி சுற்றுப்போட்டியில் பிரேலில் - அர்ஜென்டினா அணிகள் மோதின. போட்டி தொடங்கும்முன் இருநாட்டு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அர்ஜென்டினா ரசிகர்களை லத்தியால் தாக்கியுள்ளனர். ரசிகர்கள் தாக்கப்பட்டத்தை பார்த்த அர்ஜென்டினா வீரர்கள் அவர்களுக்கு ஆதரவாகச் சென்று காவலர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.
அமைதி திரும்பினால் மட்டுமே விளையாடுவோம் எனக்கூறி அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி வீரர்களுடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார். இதனால் 30 நிமிடங்கள் தாமதமாக போட்டி தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 1-0 என வெற்றி பெற்றது. பின்னர் காவல்துறையால் தாக்கப்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் அர்ஜென்டினா அணி வெற்றியை கொண்டாடியது.