பூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது ? காத்திருக்கும் கால்பந்தாட்ட ரசிகர்கள் !

பூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது ? காத்திருக்கும் கால்பந்தாட்ட ரசிகர்கள் !
பூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது ? காத்திருக்கும் கால்பந்தாட்ட ரசிகர்கள் !
Published on

உலகக் கோப்பை கால்பந்தாட்ட கிரிக்கெட் போட்டி ரஷ்யாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற விளையாட்டுத் திருவிழாக்களில் ரசிகர்களிடையே மூட நம்பிக்கைகள் இருக்கும். அதாவது போட்டி நடைபெறுவதற்கு முன்பாக ஏதோ ஒரு விலங்கினம் வைத்து எந்த அணி இன்றையப் போட்டியில் ஜெயிக்கும் என கணிப்பதாகும்.

இதுபோன்ற கணிப்புகளும் மூட நம்பிக்கைகளும் கால்பந்தில் மிக மிக அதிகம். 2010 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையின்போது, ஜெர்மனியில் உள்ள கடல்வாழ் உயிரினங்கள் பூங்காவில் இருந்த பால் என்ற ஆக்டபஸ் இதுபோல் மிக சரியாக கணித்தது. இரண்டு பெட்டிகளில் பாலுக்கு உணவு வைக்கப்பட்டது. அன்றைய போட்டியில் பங்கேற்கும் அணியின் கொடிகள் அந்தப் பெட்டியில் இருக்கும். எந்தப் பெட்டியில் உள்ள உணவை ஆக்டபஸ் தேர்ந்தெடுக்கிறதோ அந்த அணியே வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது. 14 போட்டிகளில் 12 இல் பால் சரியாக கணித்து உலகெங்கும் புகழ்ப்பெற்றது.

இந்த உலகப் புகழ்ப்பெற்ற ஆக்டோபஸ் பால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடநலக் குறைவால் உயிரிழந்தது. இந்நிலையில் இந்தாண்டு ரஷ்யாவில் உள்ள ஒரு சர்ச்சில் இருந்த காது கேட்காத ஆச்சிலிஸ் என்ற பூனை கால்பந்தாட்ட ஜோசியம் பார்பதில் புகழ்ப்பெற்றுள்ளது. இந்தாண்டு போட்டியின் முதல் ஆட்டத்தில் ரஷ்யா வெற்றிப் பெறும் என கணித்தது அதன்படியே நடந்தது. இப்போது தொடர்ந்து பல முக்கிய நாடுகள் பங்கேற்கும் போட்டிகளின் போது இந்த பூனை சரியாக கணித்து கலக்கி வருகிறது.

இந்நிலையில் பூனைக்கு போட்டியாக கிளியொன்று புதிதாக கணிப்பு சொல்ல ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், இந்தக் கிளி ரஷ்யாவில் இல்லை. ஜப்பானில் இருப்பதால் கிளிக்கு பூனையால் பாதிப்பில்லை. ஒலிவியா என்கின்ற இந்தக் கிளி ஜப்பான் தலைநகர் டோக்யோவின் விலங்கியல் பூங்காவில் இருக்கிறது.

இந்தக் கிளி நேற்று ஜப்பான் - கொலம்பியா இடையிலான ஆட்டத்தில் நிச்சயம் ஜப்பான் வெல்லும் என கணித்து செல்லியது. இதனையடுத்து கால்பந்து ரசிகர்கள் போட்டிகளுக்கு முன்பு பூனையும், கிளியும் என்ன சொல்லுது என்று ஆர்வமாகியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com