“விலைமதிப்பில்லாத விவசாயிகளே” ஆதரவோடு நிதி உதவி அளித்த அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்!

“விலைமதிப்பில்லாத விவசாயிகளே” ஆதரவோடு நிதி உதவி அளித்த அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்!
“விலைமதிப்பில்லாத விவசாயிகளே” ஆதரவோடு நிதி உதவி அளித்த அமெரிக்க கால்பந்தாட்ட வீரர்!
Published on

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாயிகள் ஒன்று கூடி தலைநகர் டெல்லியின் எல்லையில் போராடி வருகின்றனர். இந்நிலையில் போராடி வரும் விவசாயிகளை ஒடுக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் உலகம் முழுவதுமுள்ள மக்களின் எதிர்ப்பை பெற்றது. அதையடுத்தது பாடகி ரிஹான்னா விவசாயிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் குரல் கொடுத்திருந்தார். தொடர்ந்து கிரேட்டா தன்பெர்க், நடிகை மியா கலிஃபா மாதிரியானவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதற்கு சில இந்திய பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் அமேரிக்க நாட்டின் தேசிய கால்பந்தாட்ட லீக் போட்டியான NFL தொடரின் நட்சத்திர வீரரான ஜூஜூ ஸ்மித், போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, நிதி உதவியும் கொடுத்து உதவியுள்ளனர். 

“உங்களுடன் இதை பகிர்வதில் மகிழ்ச்சி. போராடி வரும் இந்திய  விவசாயிகளின் மருத்துவ தேவைகளுக்காக 10000 அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளேன். இந்நேரத்தில் அது உதவியாக இருக்கும் என கருதுகிறேன். இதன் மூலம் விலைமதிப்பில்லாத விவசாயிகளின் உயிரை காக்கலாம்” என ட்வீட் செய்துள்ளார் அவர். 

மற்றொரு கால்பந்தாட்ட  பிரபலம் Kyle குஸ்மோவும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் ரிஹான்னா ஷேர் செய்த அதே ட்வீட்டை தனது ட்வீட்டில் மேற்கோள் காட்டியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com