அமெரிக்க ஓபன் அரையிறுதி: வீனஸ் அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க ஓபன் அரையிறுதி: வீனஸ் அதிர்ச்சி தோல்வி
அமெரிக்க ஓபன் அரையிறுதி: வீனஸ் அதிர்ச்சி தோல்வி
Published on

அமெரிக்க‌ ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் சாம்பியனான வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் அனுபவ வீராங்கனையும், செரினா வில்லியம்ஸின் சகோதரியுமான வீனஸ் அரையிறுதியில், சக வீராங்கனை ஸ்லோனே ஸ்டீபன்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் செட்டை 6-1 என ஸ்டீபன்சும், இரண்டாவது செட்டை 0-6 என வீனஸும் கைப்பற்றினர். வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசி செட்டை 7-5 என ஸ்லோனே ஸ்டீபன்ஸ் போராடிக் கைப்பற்றினார். இதனால் புகழ்பெற்ற வீராங்கனை வீனஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

இதையடுத்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு ஸ்லோனே தகுதி பெற்றார். ஜாம்பியன் பட்டத்திற்கான இறுதி ஆட்டத்தில் மேடிசன் கீஸை எதிர்த்து ஸ்டீபன்ஸ் விளையாட உள்ளார். மேடிசன் கீசும் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக இறுதி ஆட்டத்தில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com