என்ன காயம்னு தெரியல: ஸ்ட்ரெச்சரில் ராயுடு

என்ன காயம்னு தெரியல: ஸ்ட்ரெச்சரில் ராயுடு
என்ன காயம்னு தெரியல: ஸ்ட்ரெச்சரில் ராயுடு
Published on

ஐபிஎல்லின் இரண்டாவது போட்டியின் போது மும்பை வீரர் அம்பாதி ராயுடுவுக்கு காயம் எற்பட்டதால் அவர் ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு செல்லப்பட்டார்.

ஐபிஎல்லின் இரண்டாவது போட்டியில் மும்பை மற்றும் புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற புனே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த மும்பை அணி 185 ரன்கள் எடுத்தது. அதன் பின் விளையாடிய புனே அணி, இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸின் 16வது ஓவரில், பீல்டிங்கில் ஈடுபட்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் அம்பாதி ராயுடுவுக்கு காயம் ஏற்பட்டு ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு செல்லப்பட்டார். என்ன காயம் என சரியாக தெரியவில்லை எனவும் இடுப்பு அல்லது முட்டி பகுதியில் காயம் ஏற்பட்டு இருக்கலாம் என வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேகர் தெரிவித்தார். இதனால் காயத்தின் காரணமாக ஐபிஎல்லில் விளையாடாத வீரர்கள் என்ற நீண்ட பட்டியலில் ராயுடுவும் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com