ரோட் சேஃப்டி டி20 தொடருக்கான இறுதிப் போட்டியில் இந்திய லெஜண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆல் ரவுண்டரான யூசுப் பதானின் ஆட்டம் பெரிதும் கைக்கொடுத்துள்ளது. பேட்டிங்கில் 36 பந்துகளில் 62 ரன்களும், பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார் யூசுப் பதான். அதன் மூலம் பரபரப்பான இறுதி போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றுள்ளார்.
டாஸ் வென்ற இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனால் இந்திய லெஜண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 181 ரன்களை குவித்தது. யுவராஜ் சிங் 60 ரன்களும், யூசுப் பதான் 62 ரன்களும் குவித்தனர்.
தொடர்ந்து விளையாடிய இலங்கை லெஜண்ட்ஸ் அணி இருபது ஓவர்களில் 167 ரன்களை மட்டுமே குவித்தது. அதனால் இந்தியா 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.