பயிற்சியின் போது பற்றியெரிந்த ரேஸ் கார்: நூலிழையில் உயிர் தப்பிய ஃபார்முலா 1 வீரர்!

பயிற்சியின் போது பற்றியெரிந்த ரேஸ் கார்: நூலிழையில் உயிர் தப்பிய ஃபார்முலா 1 வீரர்!
பயிற்சியின் போது பற்றியெரிந்த ரேஸ் கார்: நூலிழையில் உயிர் தப்பிய ஃபார்முலா 1 வீரர்!
Published on

அமீரகத்தின் அபுதாபியில் உள்ள யாஸ் மெரீனா சர்க்யூட்டில் நடைபெற உள்ள ஃபார்முலா 1 கார் பந்தயத்திற்கு தயாராகும் வகையில் ரேஸ் கார் ஓட்டும் வீரர்கள் பயிற்சியில் ஈடுப்பட்டனர். நேற்று நடந்த இரண்டாம் கட்ட பயிற்சியில் (FP2) பின்லாந்தை சேர்ந்த 41 வயது ஃபார்முலா 1 ரேஸரான கிமி ராய்க்கோன் பங்கேற்றார். 

அப்போது அவர் ஓட்டிச்சென்ற ஆல்பா ரோமியோ காரின் பின்பகுதி திடீரென தீப்பற்றியது. அதனை டிவியில் கவனித்த ஆல்பா ரோமியோ பொறியியல் வல்லுநர் குழு காரை ஓட்டிச் சென்ற கிமியிடம் வொயர்லெஸ் மூலமாக சொன்னவுடன் சுதாரித்துக் கொண்ட அவர் காரை டிரெக்கிலிருந்து ஓரமாக நிறுத்தி, உடனடியாக காரில் இருந்து இறங்கினார். 

தொடர்ந்து தீயை அணைக்க வந்த தீயணைப்பு வீரர்களிடம் இருந்த தீயை அணைக்கும் கருவியை வாங்கி தீப்பற்றிய இடத்தில் அதை தெளித்து தீயை அணைத்தார். “பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை. கார் தீப்பற்றியது மிகவும் வெட்கக்கேடானது. சிறிய குழப்பம் இருந்தாலும் அனைவரும் இணைந்து தீயை அணைத்தோம். அடுத்த பயிற்சியில் வேறு ஒரு கியர் பாக்ஸ் மற்றும் எஞ்சினை மாற்ற வேண்டி இருக்கலாம். பொறியாளர்களுக்கு கொஞ்சம் வேலை அதிகம் தான்” என கிமி தெரிவித்துள்ளார். 

அண்மையில் பஹ்ரைனில் கார் பந்தய வீரர் Romain Grosjean தீயில் சிக்கி காயம்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிமியை ‘தி ஐஸ் மேன்’ என செல்லமாக அழைப்பது உண்டு. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com