உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்

உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்
உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கம்
Published on

உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இருந்து அலெக்ஸ் ஹேல்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ். 70 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2419 ரன் எடுத்துள்ள இவரின் அதிகப்பட்சம் 171 ரன். 60 டி20 போட்டிகளில் விளையாடி 1644 ரன் சேர்ந்துள்ளார். அதிகப்பட்சம் 116.

உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்த ஹேல்ஸ், ஊக்கமருந்து சோதனையில் சமீபத்தில் சிக்கினார். அவர் ஊக்க மருந்து பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 21 நாட்கள் கிரிக்கெட் விளையாட அவருக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. 

பென் ஸ்டோக்ஸூடன் இணைந்து பார் ஒன்றில் தகராறில் ஏற்பட்ட பிரச்னைக்காக, ஹேல்ஸ் ஏற்கனவே தடையை அனுபவித்தவர்.

இந்நிலையில் அவரை உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. அத்துடன், ஒரு நாள், டெஸ்ட், டி20 என அனைத்து வகையான போட்டிகளுக்கான அணிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com